சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், " 2003ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு, ஆண்டொன்றுக்கு அரசின் சார்பில் 24 ஆயிரம் கோடி ரூபாய் வரையும், தனி நபரை பொறுத்தவரை ஆண்டொன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வரை அரசின் சொந்த நிதி செலவிடப்பட்டது.
தற்போது தனிநபர் கணக்கில் இருந்து அரசு கணக்கிற்கு ஓய்வூதியத் தொகை செலவை மாற்றுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. தமிழ்நாடு அரசின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், அனைத்து வகையான ஓய்வூதியத்துக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதி செலவிடப்படுகிறது.