தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகம் முழுவதும் 212 கிலோ தங்கம் பறிமுதல் - சத்யப்பிரத சாஹு

சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

By

Published : Mar 27, 2019, 4:20 PM IST

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாசாஹூ


இதுகுறித்து அவர் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மொத்தம் 1601 மனுக்களும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட 519 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் மேற்கொண்ட வாகன சோதனையில் இதுவரை 46.29 கோடி ரூபாய் பணம், 212.5 கிலோதங்கம், 327.5 கிலோ வெள்ளி மற்றும் ரூ.21.3 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 2106 பறக்கும் படை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 19 ஆயிரத்து 607 துப்பாக்கிகளை உரிமையாளர்கள் ஒப்படைத்துள்ளனர். சீவிஜில் ஆப் (C VIGIL) மூலம் இதுவரை 1106 புகார் வந்துள்ளது. இதில் 357 சரியான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 45 புகார்களின் விசாரணை நிலுவையில் உள்ளது.

அமமுகவை பொறுத்தவரை இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். வேட்புமனு திரும்ப பெறுதல் பணிகள் நிறைவடைந்தவுடன் பொதுச்சின்னம் ஒதுக்குவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என திமுக அளித்துள்ள புகார் தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details