சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 303 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 836 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,303 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே 76,89,485 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 79, 568 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1303 பேருக்கு கரோனா - மக்கள் நல்வாழ்வு துறை
தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 303 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 992 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,428 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 27 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 4 நோயாளியும் அரசு மருத்துமனையில் 9 நோயாளிகளும் என 13 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 796 உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 168 நபர்களுக்கும் கோவை மாவட்டத்தில் 120 நபர்களும் அதிக அளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார்? - நாளை வாக்கு எண்ணிக்கை