தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அறிவிப்பு! - மக்கள் நல்வாழ்வுத்துறை

corona update
corona update

By

Published : Oct 18, 2020, 6:24 PM IST

Updated : Oct 18, 2020, 7:43 PM IST

18:09 October 18

தமிழ்நாட்டில் இன்று(அக்.18) 3, 914 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,87,400ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து 3,914 பேர் என இன்று பதிவாகியுள்ளது. மேலும் 39, 121பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அக்டோபர் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 88 ஆயிரத்து 643 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 3,914 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் 86 லட்சத்து 96 ஆயிரத்து 455 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் , தனிமைப்படுத்தும் மையங்களில் 39 ஆயிரத்து 121 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 4,929 நபர்கள் மேலும் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 637 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 29 நோயாளிகளும், அரசு மருத்துவமனைகளில் 27 நோயாளிகள் என 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கரோனா தொற்றின் தாக்கம் கடந்த வாரம் முதல் வேகமாக குறைந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் அட்டவணை கீழ்காணுமாறு;

சென்னை மாவட்டம்: 1,89,995

செங்கல்பட்டு மாவட்டம்: 41164

கோயம்புத்தூர் மாவட்டம்: 39,818

திருவள்ளூர் மாவட்டம்: 36066

காஞ்சிபுரம் மாவட்டம்: 24421

சேலம் மாவட்டம்: 25127

கடலூர் மாவட்டம்: 22,498

மதுரை மாவட்டம்: 18,018

திருவண்ணாமலை மாவட்டம்: 17,064

வேலூர் மாவட்டம்: 17,033

தேனி மாவட்டம்: 15,952

விருதுநகர் மாவட்டம்: 15,134

ராணிப்பேட்டை மாவட்டம்: 14,513

தூத்துக்குடி மாவட்டம்: 14,325

கன்னியாகுமரி மாவட்டம்: 14,293

தஞ்சாவூர் மாவட்டம்: 14,491

திருநெல்வேலி மாவட்டம்: 13,880

விழுப்புரம் மாவட்டம்: 13,109

திருச்சிராப்பள்ளி மாவட்டம்: 11,850

திருப்பூர் மாவட்டம்: 11,165

புதுக்கோட்டை மாவட்டம்: 10,242

கள்ளக்குறிச்சி மாவட்டம்: 9,955

திண்டுக்கல் மாவட்டம்: 9,574

திருவாரூர் மாவட்டம்: 9,007

ஈரோடு மாவட்டம்: 9,131

தென்காசி மாவட்டம்: 7,718

நாமக்கல் மாவட்டம்: 8,095

நாகப்பட்டினம் மாவட்டம்: 6,245

ராமநாதபுரம் மாவட்டம்: 5,863

திருப்பத்தூர் மாவட்டம்: 6,109

சிவகங்கை மாவட்டம்: 5,651

கிருஷ்ணகிரி மாவட்டம்: 6,044

நீலகிரி மாவட்டம்: 6,089

தருமபுரி மாவட்டம்: 5,170

அரியலூர் மாவட்டம்: 4,260

கரூர் மாவட்டம்: 3,792

பெரம்பலூர் மாவட்டம்: 2,050

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 982

ரயில் மூலம் வந்தவர்கள்: 428
 

Last Updated : Oct 18, 2020, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details