இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று(அக்.9) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் புதிதாக 95 ஆயிரத்து 301 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்து 166, தமிழ்நாட்டுக்கு பிகாரில் இருந்து வந்த 11 நபர்கள், ஜார்கண்டில் இருந்து வந்த இரண்டு நபர்கள், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இருந்து வந்த தலா ஒரு நபர்கள் என 5 ஆயிரத்து 185 நபர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,185; இறப்பு - 68 - கரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாடு
18:03 October 09
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக்.9) புதிதாக 95 ஆயிரத்து 301 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 5 ஆயிரத்து 185 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 79 லட்சத்து 6 ஆயிரத்து 698 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 128 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில், தற்போது 44 ஆயிரத்து 197 நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 357 நபர்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 811ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 34 நோயாளிகள், அரசு மருத்துவமனையில் 34 நோயாளிகள் என 68 நபர்கள் கடந்த 24 மணிநேரத்தில் இறந்துள்ளனர். இதனால் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 120ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு விவரம்:
சென்னை - 1,79,424
செங்கல்பட்டு - 38,807
திருவள்ளூர் - 34,388
கோயம்புத்தூர் - 36,332
காஞ்சிபுரம் - 23,246
கடலூர் - 21,429
சேலம் - 22,706
மதுரை - 17,310
திருவண்ணாமலை - 16,390
வேலூர் - 16,009
தேனி - 15,490
விருதுநகர் - 14,722
தூத்துக்குடி - 13,994
ராணிப்பேட்டை - 13,963
கன்னியாகுமரி - 13,600
திருநெல்வேலி - 13,372
தஞ்சாவூர் - 13,348
விழுப்புரம் - 12,371
திருச்சிராப்பள்ளி - 11,225
புதுக்கோட்டை - 9,718
கள்ளக்குறிச்சி - 9,593
திருப்பூர் - 9,659
திண்டுக்கல் - 9,235
திருவாரூர் - 8,211
ஈரோடு - 7,976
தென்காசி - 7,572
நாமக்கல் - 6,818
ராமநாதபுரம் - 5,700
நாகப்பட்டினம் - 5,716
திருப்பத்தூர் - 5,611
சிவகங்கை - 5,434
கிருஷ்ணகிரி - 5,304
நீலகிரி - 5,141
தருமபுரி - 4,449
அரியலூர் - 4,042
கரூர் - 3,467
பெரம்பலூர் - 1,961
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 980
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: 'இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் புற்றுநோய் பாதிப்பு 13.9 லட்சமாக அதிகரிக்கும்' - ஐசிஎம்ஆர்