அண்மைக்காலமாக கடலோரப் பகுதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கடலோர பாதுகாப்புப் பிரிவிக்கு வருகைதந்த இந்திய கடலோரக் காவல்படை பொது இயக்குநர் ராஜேந்திர சிங் மேம்படுத்தப்பட்ட கடல்வழி பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்பு குறித்து ஆய்வு! - probe
சென்னை: தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்பு குறித்து இந்திய கடலோர காவல் படையின் பொது இயக்குநர் ராஜேந்திர சிங் ஆய்வு செய்தார்.
coast guard
மேலும், ஒன்பது கடலோரக் காவல்படை கப்பல்கள், இரண்டு டோரணியர் விமானம், மூன்று சேடக் ஹெலிகாப்டர்களின் பாதுகாப்பு பயிற்சியையும் ஆய்வு செய்தார். இதனையடுத்து, மீனம்பாக்கத்தில் உள்ள கடலோரக் காவல்படை குடியிருப்பு வளாகத்தில் நீச்சல் குளத்தையும் அவர் திறந்துவைத்தார்.