தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2021, 8:05 PM IST

ETV Bharat / state

எடியூரப்பாவுக்கு நாளை ஆணித்தரமான பதில்

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை.4) கடிதம் எழுதவுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

சென்னை:கர்நாடக மாநிலம், மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில், கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

இந்த நிலையில் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும் என்றும், அணை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

நாளை பதிலளிக்கிறார் ஸ்டாலின்

இச்சூழலில், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக நாளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகவிற்கு ஆணித்தரமான பதிலை அளிப்பார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா எழுதிய கடிதத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக இரண்டு மாநில அரசும் விவாதித்து இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மேகேதாட்டு அணை கட்ட அனுமதி

இந்த விவகாரம் விவாதிக்கக் கூடிய ஒன்றா? இல்லையா? என்பது குறித்து முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவிப்பார். இரண்டு மாநில அரசிடமும், ஒன்றிய அரசு இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை’என்றார்.

அண்மையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது மேகேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மேகேதாட்டு அணை விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

ABOUT THE AUTHOR

...view details