தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நேரத்தின் அருமையை உணருங்கள்...’ - 2ஆவது நாளாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்! - முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: பேரவையில் ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து அதிகமாக புகழ்ந்து பேசும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Aug 28, 2021, 2:35 PM IST

Updated : Aug 28, 2021, 3:43 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம், பால்வளத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்...

இந்நிலையில், கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், மானியக் கோரிக்கை விவாதத்தின் மீது பேசுகையில் முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”மானியக் கோரிக்கை மீது பேசும்போது நேரத்தை கவனத்தில் கொண்டு பேச வேண்டும். புகழ்ந்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை கட்டளையாக ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து அதிகமாக புகழ்ந்து பேசுபவர்கள் மீது இனி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

தொடர்ந்து 2ஆவது நாளாக எச்சரிக்கை

முன்னதாக இதேபோல் சட்டத்துறை அமைச்சரை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (ஆக.27) எச்சரித்தார்.

நீதிமன்றக் கட்டணம் தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அறிமுகம் செய்தபோது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் இருவரையும் வாழ்த்திப் பேசினார்.

நேரத்தின் அருமையை உணருங்கள்...

அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஸ்டாலின், ”சட்டத்துறை அமைச்சர், சட்டமுன்வடிவை அறிமுகம் செய்ய நேரடியாக வரவேண்டும். பதில் அளித்துப் பேசும்போதுகூட சில வார்த்தைகளை சேர்த்துப் பேசலாம்.

திமுக உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் உரைகளின்போதும், பதில் அளிக்கும்போதும் உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய, நம் முன்னோடிகளை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தி பேசுவது முறையாக இருக்கும்.

ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு கட்டளை

ஆனால், கேள்வி நேரத்துக்கும், சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கு இருக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை” எனக் கூறினார்.

முன்னதாக மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தனது நிலைமை துரைமுருகனுக்குத் தெரியும் எனப் பேசியதோடு, பாட்டுப் பாடி தனது நிலையை விளக்கியதும் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:பாட்டாலே பதிலளித்த ஓபிஎஸ்: பேரவையில் சிரிப்பலை

Last Updated : Aug 28, 2021, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details