தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் மக்களுக்கு விஜய தசமி வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் பழனிசாமி - தமிழ் மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து தமிழ் மக்களுக்கும் ஆயத பூஜை, விஜய தசமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

TN CM Palaniswami extend Ayudha pooja greetings

By

Published : Oct 6, 2019, 11:11 AM IST

ஆண்டுதோறும் ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகைகளை பொதுமக்கள் கோலகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகையின் போது பொதுமக்கள் தொழில் சிறக்கவும், தங்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என சாமியை தரிசிப்பர். அது மட்டுமல்லாது பலரும் தங்களின் சிறிய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதுமுண்டு.

இந்தாண்டுக்கான ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகள் நாளை (அக்.7) மற்றும் நாளை மறுநாள் (அக்.8) ஆகிய தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆயுத பூஜை, விஜய தசமி விழாவை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்தில் அவர்," தமிழ் மக்கள் அனைவரும் அனைத்து நலங்களையும், வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் மனமகிழ்வுடன் வாழவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details