இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாலைமுரசு தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த செய்தியாளர் செந்தில்குமார் சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
செய்தியாளர் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்! - journalist
சென்னை: சாலை விபத்தில் இறந்த மாலைமுரசு தொலைக்காட்சி செய்தியாளர் செந்தில்குமாருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்
செந்தில்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என அவர் குறிப்பிட்டார்.