தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 19 ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று வட சென்னை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினியிடம் 3 வேட்பாளர்கள் 4 வேட்பு மனுக்களை அளித்தனர்.
வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் மந்தம்! - திமுக
சென்னை: வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் இரண்டாவது நாளான இன்றும் சுயேட்சை உட்பட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இரண்டாம் நாளான இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் சுயேச்சைகள் உட்பட யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கலாநிதி உட்பட 10 பேர் வேட்பு மனுக்களை பெற்றுச் சென்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் இந்த தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் 22ம் தேதியும், திமுக வேட்பாளர் கலாநிதி 25 ம் தேதியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.
இதேபோல் மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பிற கட்சிகளின் வேட்பாளர்களும் 22 அல்லது 25 ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.