தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூக நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் - அமைச்சர் சரோஜா அறிவிப்பு! - சமூக நலத்துறை அமைச்சர்
அங்கன்வாடி மையங்கள் வழியாக, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
1. விழுப்புரம், வேலூர் சேலம் ராமநாதபுரம் மாவட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களின் உடல்நலம் குன்றிய ஆதரவற்ற முதியோர்களுக்கு 2 கோடியே 9 லட்சம் செலவில் சத்துமாவு வழங்கப்படும்.
2. 6,944 அங்கன்வாடி மையங்களில் ரூபாய் ஒரு கோடி 20 லட்சம் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்படும்.
3. சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம் மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை என்ற மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு, மாவட்ட சமூக நல அலுவலர்கள், பணியாளர்கள் உருவாக்கப்படும்.
4. கடலூர் சிறுவர், சிறுமிகளை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் முதல் தளம் 1.15 கோடி செலவில் கட்டப்படும்.
5. தஞ்சாவூரில் உள்ள சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் எல்லாம் கட்டடத்தின் முதல் தளம் மற்றும் கூடுதல் கட்டடம் 2.46 கோடி செலவில் கட்டப்படும்.
6. தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை மாவட்ட அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள ரத்த சோகை குறைபாடு உடைய கர்ப்பிணி பெண்களுக்கு சிவப்பு அவல் வெல்லம் கலந்த கலவை 89.81 லட்சம் செலவில் வழங்கப்படும்.
7. சேலம் வேலூர் விழுப்புரம் மாவட்ட அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள ரத்த சோகை குறைபாடு உடைய கர்ப்பிணி பெண்களுக்கு இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு 9.40 லட்சம் செலவில் வழங்கப்படும்.
8. திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜவ்வாது மலை வட்டாரங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு வரும் 2 - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ரத்த சோகையை போக்கும் வகையில், கீரை மற்றும் சிறு தானியங்களான சூப்பு ரூபாய் 82.58 செலவில் வழங்கப்படும்.
9. 1,471 அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு, எரிவாயு அடுப்பு, பிரஷர் குக்கர் வழங்கியும், சமையல் மேடை அமைத்து ரூபாய் 1 கோடியே 20 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்படும்.
10. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறையின் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் தமிழக மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்ளப்படும்.
11. தேசிய ஊட்டச்சத்து இயக்கம் குறித்து ஊடகத் துறையினருக்கு கருத்துப் பட்டறைகள் நடத்தப்படும்.
12. சமூக நலத் திட்ட துறையின் கீழ் உள்ள அலுவலகப் பணியை கண்காணிப்பதற்கு பொதுவான பயன்பாட்டு குழு உருவாக்கப்படும்.
13.குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு 10 வட்டாரங்களில் சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும்.
14. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், 100 சத்துணவு மையங்களில் சமூக தணிக்கை 20.20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
15. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சத்துணவு மைய பணிகளை மேற்கொள்வதற்கான தனியாக அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் 69.70 லட்சம் செலவில் தோற்றுவிக்கப்படும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா
TAGGED:
சமூக நலத்துறை அமைச்சர்