தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நகராட்சி அதிகாரி குறித்து தகவல் கேட்ட பள்ளி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

blackmail
blackmail

By

Published : Oct 24, 2020, 4:57 AM IST

சென்னை சின்னமலை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கென்னடி நேசமணி(58). இவர் சொந்தமாக பெபில்ஸ் என்ற பெயரில் பிளே ஸ்கூலை நடத்தி வருகிறார். இவர் தனது நில பிரச்னை தொடர்பாக கடந்த 15ஆம் தேதி தகவல் அறியும் உரிமை சட்ட அலுவலகத்திற்கு சென்று பல்லாவரம் நகராட்சியில் நகர திட்டமிடல் அதிகாரியாக பணியாற்றும் மாறன் குறித்து தகவல்களை கேட்டுள்ளார்.

இதனையடுத்து, நேற்று கென்னடியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபர், தான் மாறனின் வழக்கறிஞர் பேசுவதாக கூறியதுடன், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அவர் குறித்து தகவலை கேட்க கூடாது என மிரட்டல் விடுத்து செல்போனை துண்டித்துள்ளார்.

இதனால் பயந்து போன கென்னடி, உடனடியாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details