ஆதம்பாக்கம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட மூவர் கைது - செயின் பறிப்பு
சென்னை: ஆதம்பாக்கம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி(68), அவரது மனைவி அன்னபூபதி (64). இவர்கள் கடந்த 14ஆம் தேதி தில்லைகங்கா நகர் மெயின் ரோடு வழியாக ஜீவன் நகருக்கு கடைக்கு செல்வதற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் அன்னபூபதி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்தனர். அவர் தாலி சங்கிலியை இறுக்கமாக பிடித்து இருந்ததால், பாதி சங்கிலியை மட்டும் அறுத்துக்கொண்டு குற்றவாளிகள் ஆட்டோவில் தப்பித்து சென்றனர்.
பின்னர் இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் போலீசார், உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சியில் பதிவான ஆட்டோ என்னை வைத்து விசாரணை செய்தனர். பின்னர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரனை மேற்கொண்டபோது, முருகன் மற்றும் அவரது நண்பர்களான பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (32) ,ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஐயப்பன் (45) மூவரும் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து பறிக்கப்பட்ட தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.