தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடு நாட்களாக காவல்துறைக்கு டாட்டா காட்டிய பெண் கைது! - women arrest

சென்னை: நெடு நாட்களாக சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண், சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

நெடு நாட்களாக காவல் துறைக்கு டாட்டா காட்டிய பெண் கைது!

By

Published : Aug 13, 2019, 12:29 AM IST

மஸ்கட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஓமன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா(56) என்ற பெண் மீது அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

நெடு நாட்களாக காவல்துறைக்கு டாட்டா காட்டிய பெண் கைது!

அப்போது மரிய தெரசாவின் ஆவணங்களை சோதனை செய்தபோது சிலை தடுப்பு காவல்துறையினர் எல்.ஓ.சி போட்டுள்ளது தெரியவந்தது. அவரை விசாரணை செய்தபோது, 2016ஆம் ஆண்டு மரிய தெரசா வீட்டிலிருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தேடி வருவதும், அதிலிருந்து அவர் தலைமறைவாகியதும் தெரிந்தது.

உடனே அவர்கள் மரிய தெரசாவை கைதுசெய்து, கடத்தல் சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்கனர்.

ABOUT THE AUTHOR

...view details