கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரு பள்ளி மட்டும் 100 சதவீத தேர்ச்சி - 100 சதவீதம்
சென்னை மாநகராட்சி கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஒரே ஒரு பள்ளி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது
சென்னையில் 32 மேல்நிலைப்பள்ளிகள் சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கிவருகிறது. 4,833 மாணவ, மாணவிகள் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 4,520 பேர் தேர்ச்சிப் பெற்றனர். சென்னை பள்ளிகள் ஒட்டுமொத்தமாக 93.52 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்நிலையில் சென்னை நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் 14 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேலும் 74 பேர் 450 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 2018-19ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.