தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணை ஆபாச காணொலி எடுத்து மிரட்டிய நபர் கைது - சென்னை கிரைம் செய்திகள்

சென்னை: பெண்ணை ஆபாச காணொலி எடுத்து மிரட்டிய நபரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை
சென்னை

By

Published : Apr 21, 2021, 1:39 PM IST

சென்னை மாவட்டம் தாம்பரம் பகுதியில் 29 வயதான பெண்மணி தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். அவர் திருமணத்திற்கு முன்பு தன்னுடன் வேலைசெய்த சத்தியராஜ் என்பவருடன் நெருக்கமாகப் பழகியுள்ளார்.

இருவரும் பழகியபோது எடுத்த ஆபாச காணொலி தற்போது சத்தியராஜ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும், வெளியிடாமல் இருக்கப் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இது குறித்து பெண்மணி உடனே தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:11ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உ.பி. இளைஞர் பலி

ABOUT THE AUTHOR

...view details