சென்னை நெற்குன்றம் முனியப்பா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மாடியில் குடித்துவிட்டு சத்தம் போட்டவர்களை, அதே குடியிருப்பில் உள்ள கன்னியப்பன் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் தகராறு எற்படவே, ஆத்திரமடைந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளியான கன்னியப்பன், வெள்ளி பாத்திரத்தை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த அமிலத்தை அங்கு குடிபோதையில் இருந்த எட்டு பேர் மீதும் வீசியுள்ளார்.
குடிபோதையில் தகராறு: எட்டு பேர் மீது அமிலம் ஊற்றிய வாலிபர் கைது - acid
சென்னை : கோயம்பேட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் எட்டு பேர் மீது அமிலம் ஊற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குடிபோதையில் தகராறு
இதில் பலத்த காயம் ஏற்பட்ட அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவத்தில் கன்னியப்பனை கைது செய்த கோயம்பேடு காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.