தமிழ்நாட்டில் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. கரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் அவ்வப்போது முதலமைச்சர் ஆலோசனை நடத்திவருகிறார். சென்னையில் கரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் - cm palanisamay attent cabinet meeting
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூலை 14) கூடுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 14) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள், நிவாரணம் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் இருப்பின் அவை தொடர்பாகவும் கலந்தாலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: இந்திய விமான பயணிகள் சங்கத்தின் தேசிய தலைவர் சுதாகர் ரெட்டி உயிரிழப்பு
!