நெடுஞ்சாலைத் துறை பாதுகாப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்படும். நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ. 15,850 கோடி ஒதுக்கீடு.
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும். சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ. 12301 கோடி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ 5,500 கோடி.
சாலை பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.1,403 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2ஆவது திட்டப் பணிகளுக்கு ரூ. 615.54 கோடி.
போக்குவரத்து துறைக்கு ரூ. 2,716 கோடி நிதி ஒதுக்கீடு. அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.