தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாமக சார்பில் விருப்பமனு பெறுவதற்கான தேதி அறிவிப்பு - பாமக சார்பில் விருப்பமனு பெறுவதற்கான தேதி அறிவிப்பு

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 23ஆம் தேதி முதல் மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PMK announced nomination process starts from 23rd of FEB
PMK announced nomination process starts from 23rd of FEB

By

Published : Feb 20, 2021, 7:26 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என, அறிவித்துவருகின்றன.

அந்தவரிசையில், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து பிப்ரவரி 23ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன. சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மண்டல அலுவலகத்தில் இவ்விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

வரும் 23ஆம் தேதி, காலை 10.30 மணி முதல் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை மேற்கண்ட அலுவலகத்தில் பெற்று, நிரப்பி, உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10 ஆயிரம், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5 ஆயிரம், அனைத்து தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.5 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details