தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 2ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் 11 மணிக்கு கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
17:54 January 21
அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் மூலம் சபாநாயகர் தனபால் சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது தேர்தல் காலம் என்பதால் இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் தேர்தல் செலவுகளுக்காக சுமார் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் மக்கள் சார்ந்த நலத்திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிடும் என்றும் கருதப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்தக் கூட்டத்தொடரில் வேளாண்மை சட்டம், அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து திமுக கேள்வி எழுப்பலாம் என்றும் தெரிகிறது.