தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்... - இன்றைய சட்டப்பேரவை நிகழ்வு

tn assembly live updates with ETV Bharat TamilNadu
tn assembly live updates with ETV Bharat TamilNadu

By

Published : Mar 16, 2020, 10:03 AM IST

Updated : Mar 16, 2020, 4:51 PM IST

16:27 March 16

கோவை விமான நிலைய விரிவாக்கம் என்னாச்சு? முதலமைச்சர் பதில்!

சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் கோவையில் விமான நிலைய விரிவாக்கம் இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனியார் இடங்களில்  நிலம் உள்ளதால் அதை அரசு கையகப்படுத்த காலதாமதம் ஏற்படுகிறது. இதனால்  கோவை விமான நிலையம் விரிவாக்கம் தாமதமாக நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் எந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் முழுமையாக நிலத்தை கையகப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறார் அவரின் இலாக்க வரும் போது பார்ப்போம் எனப் பேசினார். 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் உங்கள் உறுப்பினர் பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு உரிய பதிலையே கூறினேன். கோவையில் விமான நிலையம் அமைக்க கூட நிலம் முழுமையாக  கையகப்படுத்த வேண்டும். அனைத்து திட்டதிற்கும் இது பொருந்தாது என பதிலளித்தார்.

14:51 March 16

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் அபராதம் எவ்வளவு?

கடந்த 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இதில் உள்ளாட்சிகளில் கடந்த டிசம்பர் 2019 வரை 81826 முறை சோதனை நடத்தப்பட்டு 947 மெட்ரிக் டன் நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு 4.18 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பேரூராட்சிகளில் 83561 முறை சோதனை மேற்கொள்ளப்பட்டு 119 மெட்ரிக் டன் நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு 106 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  

மேலும் 2020 ஜனவரி  முதல் 23900 முறை சோதனை மேற்கொள்ளப்பட்டு 8.70 மெட்ரிக் டன் நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு 14.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ளது.

13:32 March 16

துரைமுருகன் - முதலமைச்சர் காரசார விவாதம்!

அனைத்து கிராமங்களும் எல்.இ.டி யாக மாற்றப்பட்டுள்ளதால், 610 கோடியே 38 லட்சம் ரூபாய் மின் சேமிப்பு கிடைத்துள்ளது என்றும்  ராஜீவ்காந்தி வேலை உறுதித் திட்டப் பணி வேலை செய்பவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது எனவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

இதில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன், அன்றாடங்காச்சிகளுக்கு பணத்தை வங்கியில் போட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்..? எனக் கேட்டார்.

இதற்கு பதலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதனை நாடாளுமன்றத்தில் பேசினால்தான் பதில் கிடைக்கும்.அதனை இங்கு பேசினால் ஒன்றும் செய்ய இயலாது. 38 பேர் தேர்தெடுக்கப்பட்ட அனுப்பப்பட்டுள்ள நிலையில் இதனை ஏன் நீங்கள் பேசிப் பெறவில்லை.. அது உங்களின் உரிமை அல்லவா..? எனத் தெரிவித்தார்.

12:37 March 16

கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் வெளிநடப்பு!

என்.பி.ஆர், என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து எதுவும் தெரிவிக்காததால்தான் வெளிநடப்பு செய்ததாக கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் தெரிவித்தார். 

மேலும், தலைமைச் செயலர் தலைமையில் இஸ்லாமிய சமுதாய தலைவர்களை அழைத்து பேசியது குறித்து பேச வாய்ப்பு கேட்டபோது, சபாநாயகர் வாய்ப்பினை மறுத்தார் எனக் குறிப்பிட்டார்.

12:24 March 16

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணி -அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்

தமிழ் வழியில் பயின்றவருக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதாவை பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

12:24 March 16

சட்டபேரவை பார்வையாளர்கள் வருகைக்கு தடை -சபாநாயகர் அறிவிப்பு!

இன்று மதியம் முதல் சட்டபேரவை பார்வையாளர்கள் வருகைக்கு மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை - வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

12:17 March 16

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் விளக்கம்!

கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 60 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. கொரோனாவை தடுக்கும் வகையில் அண்டை மாநிலங்களில் செக் போஸ்ட் வைத்து பரிசோதனை செய்யப்படுகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார். 

மேலும் கொரோனாவை தடுப்பதற்காக 5ஆம் வகுப்புவரை விடுமுறையும், 16 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பும் அரசு செய்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

12:10 March 16

அரசியல் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் -துரைமுருகன்

பரவிவரும் கொரோனா வைரஸ் விவாதம் வைத்த எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், அனைத்து இடங்களிலும் கொரோனா பேச்சாகவே உள்ளது. அதனால் அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து கூட்டம் கூட்டுவதை  தவிர்க்க வேண்டும் என்றும் வைரஸ் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் அலுவல் ஆய்வு கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும் சார்க் மாநாடு போன்று தமிழக முதல்வர் அண்டை மாநில முதல்வர் உடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தெலுங்கானாவில் சட்டபேரவை ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

12:03 March 16

என்பிஆர்-க்கு ஆவணங்கள் தேவையில்லை -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம்

என்பிஆர் குறித்து கேட்கப்படும் கேள்விகளில் ஆவணங்கள் கேட்கமாட்டார்கள். இது குறித்து இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தலைமை செயலர் இஸ்லாமிய தலைவர்களுடன் பேசியுள்ளார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.

11:29 March 16

குமரி - திருப்பதி குளிர்சாதன பேருந்து -அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

காட்டுமன்னார் கோயில் அருகே பொழுதுபோக்கு பூங்கா அமைக்க பரிசீலனை செய்யப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

குமரி குளச்சலிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இயக்க அரசு பரிசீலிக்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

11:05 March 16

திருநெல்வேலியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம்!

திருநெல்வேலி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில், இரண்டு முறை ஆய்வு செய்து 2 கோடி ரூபாய் செலவில் 4 லட்சம் லிட்டர் குடிநீர் வசதி, ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் அமைய உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

10:25 March 16

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

சட்டப்பேரவைக்கு வெளியே தலைமை செயலகத்தின் நான்காவது வாயில் அருகே கோவிட்-19 வைரஸ் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. 

10:14 March 16

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணி: மசோதா தாக்கல்!

தமிழ் வழியில் பயின்றவருக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதாவை பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.

அதிமுக, திமுக சார்பில் சக்கரபாணி மற்றும் காந்தி, காங்கிரஸ் சார்பில் பிரின்ஸ் ஆகிய உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசுவார்கள்.

அதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பதிலளித்து பேசுவார்.

09:34 March 16

சென்னை: சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை உள்ளிட்ட துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது.

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியுள்ளது. இதில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை உள்ளிட்ட துறை ரீதியான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. 

Last Updated : Mar 16, 2020, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details