சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (செப். 1) நடைபெறுகிறது.
அப்போது, கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கேற்ப உட்கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் வரையறுக்கிறது.
லிஃப்ட் கட்டாயம்
அதனடிப்படையில் இரண்டு அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மின்தூக்கி வசதி கட்டாயம் அமைக்க வேண்டும்.
மேலும் சாய்தள மேடை, சிறப்பு கழிவறை, பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
முன்னதாக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை விவாதத்தின்போது பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: குடிசை மாற்று வாரியம் இனி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - முதலமைச்சர் அறிவிப்பு