சட்டப்பேரவையில், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேசுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் விலையேற்றத்தால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் , நிர்வாக திறன் இருந்திருந்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டிருக்கலாம். பெரும்பாலான கிராமசபைக் கூட்டங்களில் பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கைதான் மக்களிடம் இருந்து பரவலாக வந்தது" என்று தெரிவித்தார்.
'பேருந்து வசதி வேண்டி குமுறும் கிராமப்புற மக்கள்' - திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு - bus root
சென்னை: "பெரும்பாலான கிராமசபைக் கூட்டங்களில் பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கை தான் மக்களிடம் இருந்து அதிகமாக வந்துள்ளது" என்று, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "நிர்வாக திறன் குறித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார். அதே நிர்வாக திறனோடு இருந்திருந்தால் திமுக ஆட்சியில் இருந்து செல்லும்போது லாபத்தோடு விட்டு சென்றிருக்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வுக்கு, டீசல் கட்டண உயர்வு, ஊழியர்கள் ஊதிய உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளன" என்றார்.
இதன் பின்னர், பொதுமக்கள் மற்றும் பயணிகள் விரும்பத்தக்க வகையில் அனைத்து வகையான பயணம் வழிமுறைகளுக்கும் பயன்பெறும் வகையில் பொது இயக்க பயண அட்டை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். கொடைக்கானலில் அடுக்குமாடி பேருந்து நிறுத்தம் ரூ.20 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என பல திட்ட அறிக்கைகளை தெரிவித்தார்.