வேளாண்துறை துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் மூன்று கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படும் என்று கூறினார். இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இயற்கை விவசாயிகள் பட்டியல்
இயற்கை எருவை பயன்படுத்தும் உழவர்களின் பட்டியல், இயற்கை விவசாயிகள் பட்டியல் என வட்டாரம் தோறும் தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இயற்கை வேளாண் திட்டத்திற்கு ரூ.33.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தோட்டக்கலைக் கல்லூரி
மானாவாரி பயிர்கள் ஆராய்ச்சியை மேம்படுத்த அதற்கான மையம் சிவகங்கை செட்டிநாட்டில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மேலும் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி கிருஷ்ணகிரி ஜூனூரில் 150 ஏக்கரில் அமைக்கப்படும் என்றும், இதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
தேங்காய் மையம்
மீன் பதப்படுத்தலுக்கு நாகையில் மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். கோவையில் தேங்காய் மையம், திருச்சியில் வாழை மையம், ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : நவீன வசதிகளுடன் உழவர் சந்தைகள்