வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாகவும் தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும். கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்! - வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை பொறுத்தவரை இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுச்சேரி ஆகிய 10 நகரங்களில் அனல்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.