சென்னை: கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி (பிஎஸ்பிபி) ஆசிரியர் ராஜகோபாலன் மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார் என்று புகார் எழுந்ததை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி நிர்வாகத்தின் விளக்கக் கடிதம் இதன் முன்னர், பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோர்களுக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியது. அக்கடிதத்தில் பாலியல் அத்துமீறல் அல்லது பாலியல் துன்புறுத்தல் என்ற வார்த்தைகளே இடம்பெறவில்லை என பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாடகர் டி. எம்.கிருஷ்ணாவின் ட்வீட் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சென்னையின் புகழ்மிக்க பிஎஸ்பிபி பள்ளியின் நிர்வாகம் தனது பள்ளி ஆசிரியர் மீதான குற்றச்சாட்டிற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. ஆனால், 'பாலியல் அத்துமீறல்', 'பாலியல் துன்புறுத்தல்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், 'கடுமையான குற்றச்சாட்டுகள்' எனக் கடிதத்தில் பொதுவாக கூறியிருப்பதைக் கண்டு வியக்கிறேன். இது ஆணாதிக்கத்தின் உச்சம்" என்று பள்ளி நிர்வாகத்தை விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்