திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு பட்டியலினத்தைச் சேர்ந்த அமிர்தம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து அவரை சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றவிடாமல் அவமதித்தனர். ஜாதி வேற்றுமை காரணமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து ஈ டிவி பாரத் உள்ளிட்டஅனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உத்தரவிட்டதன் பேரில், அப்பகுதி துணைத் தலைவரின் கணவர், வார்டு உறுப்பினர் என இரண்டு பேரை கைது செய்தனர்.