தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து காவலர் தற்கொலை - பெண் உதவி ஆய்வாளர்தான் காரணமா? - chennai police Suicide case

திருவல்லிக்கேணி போக்குவரத்து காவலர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tiruvallikeni-traffic-police-suicide
tiruvallikeni-traffic-police-suicide

By

Published : Mar 5, 2022, 10:31 PM IST

சென்னை : அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(41). திருவல்லிக்கேணி போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், மற்றொரு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவருடன் கிருஷ்ணகுமார் தகாத உறவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், கிருஷ்ணகுமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் உதவி ஆய்வாளர் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த கிருஷ்ணகுமார் தினமும் குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி பிரிந்து சென்றதால், கடந்த நான்கு மாதங்களாக பாடி பகுதியில் உள்ள வீட்டில் கிருஷ்ணகுமார் தனிமையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், மார்ச் 3ஆம் தேதி இரவு கிருஷ்ணகுமார் குடிபோதையில் பெண் உதவி ஆய்வாளர் வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே தகவலறிந்து அப்பகுதி காவல்துறையினர், கிருஷ்ணகுமாரை அழைத்து சென்று விசாரணை நடத்தி அனுப்பிவைத்தனர்.

பெண் உதவி ஆய்வாளர்தான் காரணமா?

மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணகுமார் நேற்று (மார்ச் 4) திடீரென வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, தகவலறிந்த கொரட்டூர் காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரின் செல்போனை ஆராய்ந்தபோது, தனது தற்கொலைக்கு காரணம் பெண் உதவி ஆய்வாளர்தான் என இறப்பதற்கு முன்னதாக வீடியோவை அவர் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. மேலும் கிருஷ்ணகுமார் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

போக்குவரத்து காவலர் வீடியோ பதிவு

ஏற்கனவே, காவலர் கிருஷ்ணகுமார் குடிபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும், தனது வீட்டருகே ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட வழக்கிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வாயில் வசமாக சிக்கிய டூத்பிரஷ்; இப்படியுமா நடக்கும்?...

ABOUT THE AUTHOR

...view details