தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி தடை; ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் ரகுபதி தகவல்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

raghupathy
raghupathy

By

Published : Nov 22, 2022, 2:06 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டத்துறையில் புதிய சட்டப் பட்டதாரிகளுக்கான தன்னார்வப் பயிற்சித் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய, தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா குறித்து ஆளுநர் எந்த விதமான விளக்கமும் இதுவரை கேட்கப்படாத நிலையில், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கையாக ஆளுநரை சந்திக்க இன்று அல்லது நாளை நேரம் கேட்கப்பட்டுள்ளது.

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் இதர கட்சிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளன, வழக்கு விசாரணையின்போது தேவையான வாதங்களை அரசு முன்வைக்கும்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த தேவையான வாதங்களை வழக்கு விசாரணையின்போது அரசு முன்வைக்கும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி தடை மசோதா: பரிசீலித்து மட்டுமே வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்

ABOUT THE AUTHOR

...view details