தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம்-முதல்வர் உத்தரவு - சுப்பிரமணியன்

சென்னை: ஜம்மு காஷ்மீரில் தீவரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர் இழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குடும்பங்களுக்கு தாலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Edappadi Palaniswamy

By

Published : Feb 15, 2019, 10:03 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சவலபேரி கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் காருகுடியை சேர்ந்த சின்னையன் மகன் சிவச்சந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்த எனக்கு மனவேதனை அளிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Edappadi Palaniswamy

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவச்சந்திரன் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிடுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details