திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையிலுள்ள அன்பகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருகின்ற வேலுார் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
'கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை பொதுவெளியில் சொல்லக் கூடாது' - stalin
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பொதுவெளியில் சொல்லக் கூடாது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன்
கூட்டம் முடிந்து வெளியில் வந்த திமுக பொருளாளர் துரைமுருகனிடம் கூட்டத்தில் ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு துரைமுருகன், கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை பொது வெளியில் சொல்லக்கூடாது என்று தெரிவித்தார்.
மேலும் கருணாநிதி நினைவு நாள் பற்றி கேட்ட கேள்விக்கு, "நினைவு நாள் எவ்வாறு அனுசரிக்கப்படும் என்பதைப் பற்றி தலைமைக் கழகம்தான் அறிவிக்கும்" என்றார்.