தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச் சூடு...இது தமிழ்நாடா, வடமாநிலமா...” - சாடும் ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது என்றும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு சுயவிளம்பர படப்பிடிப்பிற்கு மட்டுமே நேரம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பியும் திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Nov 16, 2020, 9:32 PM IST

கடந்த நவம்பர் 11ஆம் தேதி சென்னை, சௌகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, மகன் ஆகிய மூன்று பேரை அவர்களது வீட்டிற்குள்ளேயே நுழைந்து சிலர் சுட்டுக் கொன்றனர்.

அதேபோல் நேற்று முன் தினம் (நவ.14) கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே முன்விரோதம் காரணமாக மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து, இன்று (நவ.16) இடத்தகராறு காரணமாக தொழிலதிபர் ஒருவர் இரண்டு விவசாயிகளை கைத்துப்பாக்கியால் சுட்டார். இதில் விவசாயிகள் படுகாயமடைந்த நிலையில், இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ”தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்றும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு சுயவிளம்பர படப்பிடிப்பிற்கு மட்டுமே நேரம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பியும் ஸ்டாலின் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா? தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத்துப்பாக்கிகள் கணக்கற்ற புழக்கத்தில் உள்ளன.

காவல் துறையை வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சுயவிளம்பர படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் ட்வீட்

இதையும் படிங்க :'வேல் யாத்திரை மூலம் மக்களை மூளைச்சலவை செய்ய முடியாது!'

ABOUT THE AUTHOR

...view details