சென்னை காசிமேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ரவுடிகள் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அதிரடியாக வீட்டினுள் புகுந்து சோதனை மேற்கொண்டதில் மூன்று பேர் கத்திகளுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரவுடிகளை பிடித்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து இரண்டு பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் காசிமேடு பகுதியை சேர்ந்த தேச கண்ணு, அருண், அஜித் என தெரியவந்தது.
காசிமேட்டில் ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது - Accused arrest
சென்னை: காசிமேடு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் பதுங்கியிருந்த ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Chennai
விசாரணையில் தேச கண்ணு மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அருணின் அண்ணன் பிரபல ரவுடி லோகு தற்போது சிறையில் உள்ளதும் தெரியவந்தது.
மூன்று பேரும் பட்டாக்கத்திகளுடன் கைது செய்திருப்பது வேறு ஏதேனும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்தார்களா அல்லது கொலை செய்துவிட்டு பதுங்கியுள்ளர்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.