சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து சிலர் மாஞ்சா நூல், பட்டம் விற்பனை செய்து வருவதாக வண்ணாரப்பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் நடத்திய தீவிர சோதனையில் வண்ணாரப்பேட்டை முத்தையா மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு வீட்டில் பட்டம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்து பட்டம் விற்ற 3 பேர் கைது! - மாஞ்சா விற்பனை
சென்னை: வண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல், பட்டம் விற்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்து பட்டம் விற்ற 3 பேர் கைது
உடனடியாக அங்கு சோதனை செய்த காவல்துறையினர், முகமது நிஜாமுதீன்(62), இர்சாத்(40), சர்தார்(42) ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 140 பட்டங்கள், 2 லொட்டாய்களைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மாதவரத்தில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் காயம்