கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஐந்திற்கும் மேற்பட்டோர் கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
ஊரடங்கு உத்தரவை மீறிய 3 பேர் வழக்குப்பதிவு
சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Three people indicted for violating curfew
இந்நிலையில், இன்று ஊரடங்கு உத்தரவை மீறி திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித் திரிந்த ரமேஷ் குமார் (34), டேனியல் (30), பாலாஜி (23) ஆகியோர் மீது காவல் துறையினர் அரசு விதித்த தடையை மீறி வெளியே செல்லுதல், நோய்த்தொற்று பரவக் காரணமாக இருத்தல் ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிங்க: தடையை மீறி வந்த வாகனங்கள்: நூதன தண்டனை வழங்கிய போலீஸ்!