கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் சிறு தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால், மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கொண்டு வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூவர் கைது! - மதுபானம் விற்பனை
சென்னை: திருவல்லிக்கேணியில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்தி விற்பனை செய்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி டி.பி கோயில் அருகே காரில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதையறிந்த, ரோந்து காவலர்கள் உடனடியாக சென்று காரை சோதனை செய்தனர். அப்போது 23 மதுபாட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஐடி ஊழியர் உதயகுமார்(29), தீபக்(35) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் கொத்தவால்சாடி அனுமந்தராயன் தெருவில் மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பின் மதுபானம் விற்பனை செய்த கார்த்திகை பாலன் (40) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து சுமார் 30 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.