தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துவருகிறது. ஒரு வாக்கு கூட மொத்த வெற்றி வாய்ப்பை மாற்றும் நிலையில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இந்நிலையில், தொடர்ச்சியாக மூன்று கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்கள் முன்னிலை வகித்துவருகின்றனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:
முன்னிலை விவரம்
- சென்னை கொளத்தூரில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
- சேலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர் பழனிசாமி முன்னிலை
- கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் ஹாசனும் முன்னிலை