தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே’- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருபவர்களும் முன்களப் பணியாளர்கள் என முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

By

Published : May 4, 2021, 9:16 AM IST

கரோனா தொற்றுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களே என தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.

செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details