தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மர்காஸில் மார்ச் 21ஆம் தேதி முதல் மார்ச் 24ஆம் தேதி வரை மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் பல பகுதிகளிலிருந்து கலந்து கொண்டுள்ளதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மாநாட்டை முடித்துவிட்டு பலர் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட்டனர்.
இவர்களில் பலர் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் சிலரை மாவட்ட நிர்வகம் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநாட்டில் கலந்துகொண்ட தொடர்புகொள்ள முடியாதவர்கள் தாமாகவே முன் வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.