தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடுபோன நகையை நூதனமுறையில் நகை மீட்ட காவல் ஆய்வாளர் - Thiruvanmiyur sub inspector

சென்னை: திருவான்மியூர் பகுதியில் திருடுபோன தங்க நகையை 24 மணி நேரத்தில் நூதன முறையில் மீட்ட காவல் ஆய்வாளருக்கு துணை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Chain theft  திருவான்மியூர் செயின் திருட்டு  சென்னைச் செய்திகள்  செயின் திருட்டு  chain theft  Thiruvanmiyur chain theft  Thiruvanmiyur sub inspector  திருவான்மியூர் காவல் உதவி ஆய்வாளர்
திருடுபோன நகையை நூதனமுறையில் நகை மீட்ட காவல் ஆய்வாளர்

By

Published : Jul 17, 2020, 9:19 AM IST

சென்னை திருவான்மியூர் சிவகாமிபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்த இந்திரா(50), தனது வீட்டில் வைத்திருந்த மூன்றரைப் பவுன் தங்க செயின் காணாமால் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக, விசாரிக்க சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்புக்கரசன், கைரேகைகளைப் பிரதி எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இந்திராவின் வீட்டருகே உள்ள யாரோதான் செயினைத் திருடியிருக்கலாம் என்று எண்ணிய காவல் ஆய்வாளர், "கரோனா காலத்தில் பணத்துக்காக யாரோ திருடியிருக்கிறீர்கள், எடுத்த நகையை உடனடியாக திருப்பி வைத்திவிடுங்கள். கைரேகை அடிப்படையில் குற்றவாளியை கைது செய்துவிடுவோம்" என அப்பகுதி மக்களிடையே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் இந்திராவின் மூன்றரைப் சவரன் தங்க நகை அவர் வீட்டில் திரும்ப வைக்கப்பட்டிருந்தது. புகார் கொடுத்த 24மணி நேரத்தில் திருடுபோன நகையை உரிமையாளருக்கு கிடைக்கச் செய்த காவல் ஆய்வாளருக்கு துணை ஆணையர் விக்கிரமன் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆட்டோவில் கஞ்சா கடத்தல்: பெண் உள்பட மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details