சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கலை எனது தொழில், அரசியல் எனது கடமை. திருவள்ளுவருக்கு வண்ணம் பூசுவது தேவையில்லாதது. எல்லா மதத்தினரும் அவர்களுக்கு திருவள்ளுவர் சொந்தம் என்று கொண்டாடுவது இது முதல்முறை அல்ல. திருவள்ளுவர் கிறிஸ்துவரா என்று நானே பேச்சு போட்டியில் பேசியிருக்கிறேன். திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லாமல் பொதுவானவர். இன்னும் சில அறிஞர்கள் சமணராக இருப்பார் என்றும் கூறுவர். திருவள்ளுவரை தங்களுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள் என்ற ஒன்றை தான், ஒரு தமிழனாக என்னால் உணர முடிகிறது.
‘திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லை; அவர் பொதுவானவர்’ - கமல் ஹாசன்! - திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லாத பொதுவானவர், கமல் ஹாசன்
சென்னை: எல்லா மதத்தினரும் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடுவது முதல் முறை அல்ல, திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லாத பொதுவானவர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
kamal hassan
உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:'திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது' - வெடித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!