தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேமுதிக, பாமகவால் எங்களுக்கு பாதிப்பில்லை: திருநாவுக்கரசர் பேச்சு

சென்னை: தேமுதிக மற்றும் பாமக கூட்டணியில் சேர்ந்துள்ளதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Thirunavukkarasar

By

Published : Mar 14, 2019, 7:14 PM IST

திராவிட முன்னேற்றக்கழகம்- காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் ஒவ்வொரு கட்சிகளுக்கான எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் அழகிரி தலைமையிலான குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

இன்று மாலை யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற பட்டியல் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு அந்தந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

காங்கிரஸ் தேர்தல் கமிட்டி சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். மீண்டும் டெல்லியில் ஒரு குழு, வேட்பாளர்களை பரிசீலித்து அதன் பிறகு யார் வேட்பாளர் என்பதை ராகுல் காந்தியின் அனுமதிபெற்று அறிவிக்கும் எனத் தெரிவித்தார். தேமுதிக மற்றும் பாமக கூட்டணியில் சேர்ந்ததால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எங்கள் கூட்டணியில் ஏராளமான கட்சிகள் உள்ளன. இது இரவோடு இரவாக பேசி முடித்த கூட்டணி இல்லை. இரண்டு மூன்று ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக போராடி வருகின்ற கூட்டணி.போதுமான பலத்தோடு எங்கள் கூட்டணி உள்ளது. இதற்கு மேல சேர்ப்பதற்கும், கொடுப்பதற்கும் இடம்தான் இல்லை. எங்கள் கூட்டணியில்

பாஜக கூட்டணி என்பது மூழ்கும் கப்பல் போன்றது.மத்தியிலும், மாநிலத்தில் உள்ள ஆட்சியின் மீதும் மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. இரண்டு ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான வெற்றி பெறும் கூட்டணி. 39 தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் காலம் தாழ்த்தினாலும், குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி செய்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தர காங்கிரஸ் போராடும் எனத் தெரிவித்தார்


ABOUT THE AUTHOR

...view details