சென்னை:கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள சல்லியர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (நவ-26)சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், கலைப்புலி தாணு, கருணாஸ், கென் கருணாஸ், சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி, சீனு ராமசாமி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும்போது, ‘இப்படத்துகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நம் குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்புகள் வரும் காலத்தில் மறுக்கப்பட்டு வருவதை இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நம் மொழிக்கான உரிமை பறிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு மாபெரும் தலைவனின் பெயரைக்கூட சொல்வதற்கு ஒரு அரசு அனுமதிக்கவில்லை என்றால் இதைவிட கேவலம் எதுவுமில்லை.