சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி போல் பரபரப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் பெரும் போராட்டத்துக்கு பிறகு திருமாவளவன் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை சமூக வலைதளவாசிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இது தமிழ்நாட்டு மக்களின் வெற்றி -தொல்.திருமாவளவன் - chennai
சென்னை: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பெற்ற வெற்றி தமிழ்நாட்டு மக்களின் வெற்றி என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் வெற்றி பெற உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு தொல். திருமாவளவன் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில், சென்னை வளசரவாக்கத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், 'சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இஸ்லாமியர், வன்னியர் மக்கள் வாக்களித்ததனால்தான் வெற்றி பெற முடிந்தது. எனது வெற்றி தமிழர்களுக்கான வெற்றி. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதை ரஜினி பாராட்டவில்லை. ஆனால் மோடி எதிர்ப்பு அலையால் வெற்றி என்று கூறுவது ரஜினியின் சாமர்த்தியம்' என்றார்.