திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டிற்கு நடிகை காஞ்சானா, கிரிஜா பாண்டே, கே.பி.பாண்டே, ரவி பூஷண சர்மா உள்ளிட்டவர்கள் கோயில் கட்டுவதற்கு 40 கோடி மதிப்பிலான 34 செண்ட் நிலத்தை கொடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று (பிப்.13) சென்னை தி.நகரில் ஜி.என்.செட்டி சாலையில் 'பத்மாவதி தாயார் ஆலையம்' திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் கோயில் கட்டும் பணிகள் நிறைவடையும். நாடு முழுவதும் விரைவில் இலவச திருமணம் செய்து வைக்கும் திட்டம் திருமலை தேவஸ்தானம் சார்பாக தொடங்கப்பட உள்ளது" என தெரிவித்தார்.