தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஆகஸ்ட் 21 இல் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் - கோவேக்சின் தடுப்பூசிகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 2,000 இடங்களில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள 34 வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை, மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Thirty fourth corona mega vaccination camp  corona mega vaccination camp  vaccination camp  mega vaccination camp  twenty first August mega vaccination camp  34வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்  மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்  தடுப்பூசி சிறப்பு முகாம்  தடுப்பூசி செலுத்தி கொள்ள மாநகராட்சி வேண்டுகோள்  மாநகராட்சி வேண்டுகோள்  சென்னை மாநகராட்சி  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்  இந்திய மருத்துவச் சங்கம்  தென்னக ரயில்வே துறை  முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி  முதல் தவணை தடுப்பூசி  இரண்டாம் தவணை தடுப்பூசி  கோவிஷீல்டு தடுப்பூசிகள்  கோவேக்சின் தடுப்பூசிகள்  கார்பெவேக்ஸ் தடுப்பூசிகள்
34வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

By

Published : Aug 19, 2022, 7:11 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நடத்தப்பட்ட கோவிட் தடுப்பூசி முகாமில், 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,46,797 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 48,13,470 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 2,26,495 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,79,909 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 1,29,051 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 86,812 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 5,08,124 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் வரும் ஆகஸ்ட் 21 அன்று 34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1,000 சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தென்னக ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 84,810 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2,56,270 கோவேக்சின் தடுப்பூசிகள் மற்றும் 72,900 கார்பெவேக்ஸ் தடுப்பூசிகள் என மொத்தம் 4,13,980 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சென்னையில் இதுவரை 43,05,346 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 5,08,124 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: டோலோ 650 மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி?... அதிர்ச்சித் தகவல்...

ABOUT THE AUTHOR

...view details