தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு! - Sivashankar Baba

பள்ளி மாணவிகளுக்கு பாலியில் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மீது, மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு
சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு

By

Published : Jul 11, 2021, 1:02 PM IST

சென்னை: கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனத் தலைவர் சிவசங்கர் பாபா, அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை.11) அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு போக்சோ வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details