சென்னை: திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் எதிராக ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விதிகளை மீறி 3 வேளாண் கேடு மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போன மாநில அரசை கண்டித்தும் வருகிற 28ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர் - வைகோ ஆவேசம் - dmk
விவசாயிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் எதிராக ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விதிகளை மீறி 3 வேளாண் கேடு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர் - வைகோ ஆவேசம்
மேலும் கட்சி தலைவர்கள் எங்கெங்கு பங்கு பெறுகிறார்கள் என்ற பட்டியல் விரைவில் வெளியிடப்படும். விவசாயிகள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தை வரவேற்று ஆதரவு அளித்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.